மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு…வெள்ளி விலையில் மாற்றமில்லை!
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால், கடந்த அக்டோபர் 23- ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.28) கடிதம் எழுதியுள்ளார்.
வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!
அக்கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து, அக்டோபர் 01- ஆம் தேதி அன்று. IND-TN-12-MM-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், அக்டோபர் 23- ஆம் தேதி அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டுமென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.” இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.