Homeசெய்திகள்தமிழ்நாடுமீனவர்களின் நலனுக்கான 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மீனவர்களின் நலனுக்கான 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி, மானிய டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீனவர் நலனுக்கான 10 திட்டங்களுக்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!

அதன்படி, மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூபாய் 5,000- லிருந்து 8,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான வீடுக் கட்டும் திட்டத்தின் கீழ் 5,035 பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும், மீன்பிடித் தொழில் மேம்பாட்டிற்காக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 45,000 மீனவர்களுக்கு கடன் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூபாய் 250- லிருந்து ரூபாய் 350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மீனவக் கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், மீனவ பெண்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் வருவாய் ஈட்டும் வகையில் பல்நோக்கு கடல் பாசி பூங்கா அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார்?- நீடிக்கும் இழுபறி!

விபத்துக் காப்பீடு திட்டத்தின் கீழ் 250 மீனவக் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,000 நாட்டு படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும் என்றும், விசைப்படகுகளுக்கான மானிய விலை டீசல் 18,000- லிட்டரில் இருந்து 19,000 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காக 926 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ