Homeசெய்திகள்தமிழ்நாடுமீனவர்களின் வலையை வெட்டிக் கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்!

மீனவர்களின் வலையை வெட்டிக் கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்!

-

 

மீனவர்களின் வலையை வெட்டிக் கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்!
File Photo

வேதாரண்யம் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களது வலையை இலங்கை கடற்கொள்ளையர்கள் வெட்டித் திருடிச் சென்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது!

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள ஆறுகாட்டுத் துறையில் இருந்து 50- க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் கோவிந்தசாமிக்கு சொந்தமான விசைப்படகில் பன்னீராண்டவர், வேதமூர்த்தி உள்ளிட்ட நான்கு மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் மீன்பிடிக்க விரித்திருந்த வலையில் 300 கிலோ எடையுள்ள வலைகளை வெட்டிக் கொள்ளையடித்துச் சென்றனர்.

சென்னைக்கு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

இதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய் எனத் தெரிகிறது. இது குறித்து இந்திய கடலோரப்படை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ