Homeசெய்திகள்தமிழ்நாடுஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டண நிர்ணயம் - தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் கோரிக்கை

ஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டண நிர்ணயம் – தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் கோரிக்கை

-

- Advertisement -

தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான பயண கட்டணத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்தனர். போக்குவரத்து துறை சார்பில் “கோரிக்கையை ஏற்று புதிய கட்டணத்தை அரசு அறிவிக்கும் பட்சத்தில், நிர்ணயிக்கப்படும் கட்டணத்தில் ஆட்டோ கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் கூறியுள்ளார்.”ஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டண நிர்ணயம் - தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் கோரிக்கைசென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,  ஆணையர் சுன்சோங்கம் ஜடக், போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் மற்றும் 25 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகள் பற்றி தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். குறிப்பாக, ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்துதல் குறித்து விரிவாக பேசப்பட்டதாக கூறிய அமைச்சர், தனியார் செயலிகளை, ஒருங்கிணைந்த சென்னை போக்குவரத்து நிறுவனம் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.ஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டண நிர்ணயம் - தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் கோரிக்கை

தேவை உணர்ந்த காரணத்தால் தான் அரசு சார்பில் செயலி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு விதித்துள்ள வரைமுறைப்படி மஞ்சள் Board கொண்ட பைக் டாக்ஸி ஓட்டுவது உள்ளிட்டவை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகளுடன் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார். கட்டண உயர்வு குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன், ”தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான பயண கட்டணத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆணையர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.  தொழிற்சங்கங்கள் சார்பாக 1.5 கிலோமீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக 50 ரூபாயும் அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 25 ரூபாய் என அறிவிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

Rapido என்கிற இரு சக்கர வானக செயலியை பயன்படுத்தியும் ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்களும் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். தமிழக அரசே ,அரசு சார்பில் ஒரு செயலியை உருவாக்கி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்ட நடராஜன், விரைவாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் விரைவாக அரசு செயலியை உருவாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். கோரிக்கையை ஏற்று புதிய கட்டணத்தை அறிவிக்கும் பட்சத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் நடராஜன் உறுதியளித்தார்”.

செங்கோட்டையனை நீக்கினால் எடப்பாடி பழனிசாமியின் தலைமை இருக்காது… கே.சி.பழனிசாமி எச்சரிக்கை..!

MUST READ