Homeசெய்திகள்தமிழ்நாடு"அனுமதியின்றி பேனர் வைத்தால் மூன்று ஆண்டுகள் சிறை"- தமிழக அரசு எச்சரிக்கை!

“அனுமதியின்றி பேனர் வைத்தால் மூன்று ஆண்டுகள் சிறை”- தமிழக அரசு எச்சரிக்கை!

-

 

"அனுமதியின்றி பேனர் வைத்தால் மூன்று ஆண்டுகள் சிறை"- தமிழக அரசு எச்சரிக்கை!
Photo: TN Govt

கோவை மாவட்டத்தில் பேனர் விழுந்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பேனர் வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை மீண்டும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் எப்படி நிவாரணம் கோர முடியும்?: ஈபிஎஸ் தரப்பு

கடந்த ஜூன் 1- ஆம் தேதி அன்று கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் விழுந்து மூன்று பரிதாபமாக உயிரிழந்தனர். அதனையடுத்து, தமிழகத்தில் பேனர் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகளை அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளின் படி, உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல், விளம்பரப் பதாகைகள், பேனர்கள் நிறுவக் கூடாது என்ற சட்டம், கடந்த ஏப்ரல் 13- ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.

அந்த சட்டத்தை பொதுமக்கள் மற்றும் தனியார் விளம்பர நிறுவனங்கள், கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிமக் காலம் முடிந்த பிறகும், விதிமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் விளம்பர பலகைகள் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை மீறினால், பேனர் வைத்தவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறையோ, 25,000 ரூபாய் அபாரதமோ விதிக்கப்படும்.

“அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

மேலும், உரிய அனுமதியின்றி பேனர் வைப்போர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு ஓராண்டு சிறை (அல்லது) 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், பேனர் உள்ளிட்டவற்றால் உயிரிழப்பு நேர்ந்தால் அதனை வைத்த நிறுவனம் (அல்லது) தனி நபரோ இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ