சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வரலாறு படைத்த டி20 கிரிக்கெட் போட்டி!
சென்னையில் இருந்து மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 148 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என 160 பேருடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஓடுபாதையில் சென்ற போது, இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்டது.
குறிப்பாக, விமானத்தை இயக்கிய போது, கோளாறு உள்ளதை உணர்ந்த விமானி, உடனடியாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார். ஓடுபாதையில் நின்ற விமானம் இழுவை வாகனம் மூலம் புறப்பட்ட இடத்திலேயே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறை அதிகாலை வரை சரி செய்ய முடியவில்லை.
பரபரப்பு….த்ரில்….சூப்பர் ஓவர்கள்…..வெற்றி!
இதனிடையே, 148 பயணிகளும் பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு சென்னையிலேயே உள்ளனர். சரியான நேரத்தில் விமானி, கோளாறைக் கண்டுபிடித்ததால் 148 பயணிகளும் உயிர் தப்பினர்.