தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (பிப்.13) மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை வழங்காதது குறித்து அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
“கோவையில் இனி ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படும்”- அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “வெள்ள நிவாரண நிதியைக் கூட பெற முடியவில்லை; 38 எம்.பி.க்கள் இருந்து என்ன பயன்? ஒரு ரூபாய் நிதியைக் கூட மத்திய அரசிடம் இருந்து தி.மு.க. எம்.பி.க்களால் பெற முடியவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல் மாநில அரசின் நிதியை நிவாரணமாக வழங்கினோம். செம்பரம்பாக்கத்தில் திறந்த நீரைவிட சென்னை மழை வெள்ள பாதிப்பு குறைவு தான்” கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜி ராஜினாமா- ஆளுநர் ஒப்புதல்!
அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் 3 நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பினர். மழைக்கு முன்பாக அரசு எதுவும் செய்யவில்லை. நிவாரண பணியின் விளைவாக மூன்று நாடாளுமன்றத் தொகுதியை மக்கள் தி.மு.க.வுக்கு பரிசாக வழங்கவுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.