Homeசெய்திகள்குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

-

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காலம் முடிந்துள்ள நிலையில், அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் குற்றாலம் ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்தருவியில் மிதமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தற்காலிகாமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

kutralam

அவேளையில் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவியிலும் தண்ணீர் சீராக விழுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.மேலும் குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ந்த காலநிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ