Homeசெய்திகள்தமிழ்நாடுதிருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு.... பொதுமக்கள் செல்ல தடை!

திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்கள் செல்ல தடை!

-

- Advertisement -

உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கனமழை காரணமாக திடீரென  வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் இன்று  மாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குருமலை, குளிப்பட்டி , மேல்குருமலை உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

udumalai

மேலும் பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துகொண்டது.அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல், அருவியில் இன்று காலை முதல் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்த நிலையில், மாலையில் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. மேலும், பஞசலிங்க அருவி மற்றும் கோவில் பகுதிக்கு பொதுமக்கள் செல்லாமல் தடுக்க காவல்துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ