சென்னையில் தேங்கிய மழை நீரை எப்போது மோட்டார் வாங்கி எப்போது வெளியேற்றுவார்கள் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
“சென்னையில் 80% இடங்களில் மின்விநியோகம்”- தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பேட்டி!
மழை, வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட பின் சென்னை பள்ளிக்கரணையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க. ஆட்சியில் பருவமழைக்கு முன்பே பணிகள் தொடங்கப்பட்டன. மழைக்காலத்தில் மக்கள் இன்னல்களைச் சந்திக்காத வகையில் அ.தி.மு.க. ஆட்சி செயல்பட்டது. தி.மு.க. ஆட்சியில் நேற்று தான் மீட்புப் பணிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வானிலை மையம் முன்பே அறிவித்தும் தற்போதைய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னையில் தேங்கிய மழை நீரை எப்போது மோட்டார் வாங்கி எப்போது வெளியேற்றுவார்கள்? முறையாக வடிகால் வசதி செய்யப்படவில்லை; அரசின் திட்டமிடப்படாத பணிகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 1,000 குறைவு!
ரூபாய் 4,000 கோடிக்கு பணிகள் நடந்ததாக அமைச்சர்கள் கூறினாலும் மக்களுக்கு ஒன்றும் போய் சேரவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.