Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றமா?- தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றமா?- தமிழக அரசு விளக்கம்

-

தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றமா?- தமிழக அரசு விளக்கம்

கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் ஏதும் நடைபெறவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், லாவண்யா மரண வழக்கில் மனுதாரர்கள் நீதிமன்றத்தை பயன்படுத்தி கிறிஸ்தவர்களை குறிவைக்கிறது. கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிறிஸ்தவ அமைப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தங்கள் மதத்தை பரப்புவதில் எந்த தவறும் இல்லை.

அனைத்து மாநிலங்களும் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவரக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அது தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. தமிழ்நாட்டில் 3 இடங்களில் கட்டாய மதமாற்றம் நடந்துள்ளதாக மனுதாரர் கூறுவது பொய்யான தகவல், என்ன சட்டம் வேண்டும், எது வேண்டாம் என்பது மக்களுக்கு தெரியும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

MUST READ