தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்காக லிங்கன் எலக்ட்ரிக், விஷே பிரசிஷன் மற்றும் விஸ்டியன் போன்ற பல்வேறு முன்னணி அமெரிக்க நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிகாகோவில் போர்டு நிறுவன அதிகாரிகளுடன் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பதிவில் தமிழகத்தில் போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றதாக கூறியதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று சென்னையில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியைத் தொடங்க ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னை மறைமலை நகரில் நடைபெற்று வந்த கார் உற்பத்தியை கடந்த 2022ஆம் ஆண்டுடன் போர்டு நிறுவனம் நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும்