வெளிநாடுகளில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 66 சிலைகளை மீட்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!
தமிழ்நாட்டு கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் பல்வேறு நாடுகளில் அலங்காரப் பொருட்களாகவும், அருங்காட்சியகங்களிலும் இருக்கின்றனர். தற்போதும் அமெரிக்கா, சிங்கப்பூர், பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 66 சிலைகள் இருப்பதை சிலைக் கடத்தல் பிரிவு காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த சிலைகள் விரைவில் மீட்டு சம்மந்தப்பட்ட கோயில்களில் சேர்க்கப்படும் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. சைலேஷ் குமார் யாதவ தெரிவித்துள்ளார்.
கடந்த 1992- ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில் சுமார் 400 கோயில்களில் 1,300- க்கும் மேற்பட்ட சிலைகள் திருடுப் போகியுள்ளது. மேலும் 1,700 கோயில்களில் போலி சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாகக் கண்டித்தது.
அண்மை வருடங்களில் 1,116 சிலைகள் மற்றும் ஓவியங்கள் மீட்கப்பட்டுள்ளன. சைலேஷ் யாதவ் குமார் வந்த போது, கடந்த ஆறு மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து 94 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.