ஆரம்பக் கட்ட விசாரணையை அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை மீண்டும் விசாரிக்க அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைத் தெரிவித்துள்ளது.
புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் விண்ணில் பாயத் தயாரான சந்திரயான்- 3 விண்கலம்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியத்தில் 4,800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018- ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச் செய்ததோடு, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், பொது ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுடன் புகார் வந்தால், அதை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு முழு அதிகாரம் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் இடைக்கால உத்தரவைப் பிறப்பிப்பதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.