- Advertisement -
100 கோடி மதிப்புள்ள நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் இன்று கைது செய்யப்பட்டார்.
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலிசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் இன்று கருரில் கைது செய்தனர்.