டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்.07) காலை 11.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் தமிழகத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 14 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் என மொத்தம் 15 பேர் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். அவர்களை பா.ஜ.க. தலைவர்கள் சால்வை அணிவித்தும், ரோஜா பூ வழங்கியும் வரவேற்றனர்.
“அரசுப் பேருந்தில் பலகை உடைந்த சம்பவம்”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 10 நாட்கள் ஸ்பெயின் பயணத்தில் வெறும் ரூபாய் 3,400 கோடி மட்டுமே ஈர்க்கப்பட்டுள்ளது. கூட்டணிக்கு வரலாம் என்று அ.தி.மு.க.வைக் குறிப்பிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசவில்லை.
மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி?- தே.மு.தி.க. ஆலோசனை!
எல்லோரும் வரலாம்; யார் வேண்டுமானாலும் வரலாம் என்றே அமித்ஷா பேசினார். தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட வரலாம் எனவும் அமித்ஷாவின் பேச்சு பொருள்படும். நரேந்திர மோடியை பிரதமராக்க விரும்பும் கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம்” எனத் தெரிவித்துள்ளார்.