தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (ஜூலை 31) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு (Young Liu) சந்தித்து தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய முதலீடுகள் குறித்துப் பேசினார்.
சைக்காலஜிக்கல் திரில்லரில் நடிக்கும் கயல் ஆனந்தி….. லேட்டஸ்ட் அப்டேட்!
இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு, இ.ஆப., ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் டாக்டர் சைய் சியாங் (Dr. SY Chiang), பொது மேலாளர் டாக்டர் பாப் சென் (Bob Chen), தலைமை அலுவலக இயக்குநர் செந்தில் குமார், இந்திய பிரதிநிதி பி. லீ (Lee), இணை மேலாளர் ஹன்னா வேங் (Hannah Wang) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.