தைவான் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் (Foxconn), காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஆலை அமைத்து செல்போன்களுக்கான மின்னணு உதிரி பாகங்களை உற்பத்திச் செய்து வருகிறது. குறிப்பாக, தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை அசெம்பிள் செய்யும் முக்கிய நிறுவனமாகவும் ஃபாக்ஸ்கான் திகழ்கிறது.
ஆவடி CRPF கபடி போட்டி 2023 – கோப்பையை வென்றது யார்?
இந்நிறுவனம், தமிழகத்தில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், புதிய மின்னணு பாகங்கள் உற்பத்தி ஆலையை நிறுவ முடிவுச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிராண்ட் செங் மற்றும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து தொழில் முதலீடு குறித்து பேசியுள்ளனர். அத்துடன், பிற மாநிலங்களின் அரசு அதிகாரிகளைச் சந்தித்த, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தென்மாநில முதலீடுகள் குறித்து விவாதித்தனர்.
அதேபோல், ஜூலை 28- ஆம் தேதி அன்று குஜராத் மாநிலம், காந்திநகரில் நடந்த ‘செமிகான் இந்தியா 2023- ஐ’ இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு, பிரதமரைச் சந்தித்து தொழில் முதலீடு குறித்து பேசினார்.
மகளின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!
தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம், புதிய ஆலையை நிறுவும் பட்சத்தில் சுமார் 1,000- க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் கடந்த மற்றும் நடப்பு நிதியாண்டில் அதிக லாபத்தை ஈட்டி வரும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.