Homeசெய்திகள்தமிழ்நாடுரஜினியுடன் நட்பு எப்போதும் தொடரும்  - அமைச்சர் துரைமுருகன்

ரஜினியுடன் நட்பு எப்போதும் தொடரும்  – அமைச்சர் துரைமுருகன்

-

- Advertisement -

எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுமையாய் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்பொழுதும் போல் நண்பர்களாகவே இருப்போம். நடிகர் ரஜினிகாந்த் கருத்து குறித்து வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

ரஜினியுடன் நட்பு எப்போதும் தொடரும்  - அமைச்சர் துரைமுருகன்நேற்று 25-ம் தேதி திருமுருக கிருபானந்த வாரியார் 119ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வேலூர் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு மண்டபத்தில்  வாரியார்  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் துரைமுருகன் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார் அப்போது,

மூத்த அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் சமாளிப்பது கடினம் என அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது  குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,”அதே மாதிரி தான் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து சாகிற நிலைமையில் இருப்பவர்கள் எல்லாம் நடிப்பவர்களால் இளைஞர்கள் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்”,என்றார்.

இந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்

அதில்,அமைச்சர் துரைமுருகனும் நானும் நன்பர்கள் தான் அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று பதில் அளித்தார்.

இந்த நிலையில் விமான நிலையத்தில் நடிகர் ரஜினி கூறியதற்கு விஐடி பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்’

“ரஜினிகாந்த் சொன்னதை தான் நானும் சொல்கிறேன் எங்களுடைய நட்பு தொடரும். எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுமையாய் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்பொழுதும் போல் நண்பர்களாகவே இருப்போம் எங்கள் நட்பு தொடரும் என்று இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

MUST READ