Homeசெய்திகள்தமிழ்நாடுதுறை வாயிலாக ஒதுக்கிய நிதி

துறை வாயிலாக ஒதுக்கிய நிதி

-

துறை வாயிலாக ஒதுக்கிய நிதி
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.

2023 – 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறைக்கு சேர்த்து 47,266 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

துறை

இதற்கு அடுத்தபடியாக நகர்ப்புற வளர்ச்சிக்கு 38,444 கோடி ரூபாயும் ஊரக வளர்ச்சிக்கு 22,562 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் துறைக்கு என 19,465 கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கிய நிதி

மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 18, 661 கோடி ரூபாயும் காவல்துறைக்கான திட்டங்களுக்கு என 10,812 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துறை

எரிசக்தி திட்டங்களுக்காக 10,694 கோடி ரூபாயும் நீர்வளத் துறைக்கு 8,232 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகள் வாங்கவும் மற்றும் பழைய பேருந்துகளை சீரமைக்க என போக்குவரத்து துறைக்கு 8,056 கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கிய நிதி

சமூக நலத் துறைக்காக 7,745 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் துறைக்காக 4,778 கோடி ரூபாயும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் துறைக்காக 3,513 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

MUST READ