மக்களவை பொதுத் தேர்தல் 2024 கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 2,21,473 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஜி.செல்வம், அதிமுக சார்பில் இ.ராஜேசகர், பாமக சார்பில் வி.ஜோதி, நாம் தமிழர் கட்சி சார்பில் வி.சந்தோஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரம் அண்ணா பொறியில் கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தம் பதிவான தபால் வாக்குகள்
ஜி.செல்வம் (திமுக) – 3,066
இ.ராஜசேகர் (அதிமுக) – 1,580
வி.ஜோதி (பாமக) – 1,139
வி.சந்தோஷ்குமார் (நாதக) – 414
மொத்தம் 31 சுற்றுகள் அதில் ஆறாவது சுற்றிலேயே திமுக வேட்பாளர் ஜி.செல்வத்தின் வெற்றி உறுதியான நிலையில் அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் ராஜசேகரைவிட 59,525 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றார்.
காஞ்சிபுரம் தொகுதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்:
ஜி.செல்வம் (திமுக) – 5,86,044
இ.ராஜசேகர் (அதிமுக) – 3,64,571
வி.ஜோதி (பாமக) – 1,64,931
வி.சந்தோஷ்குமார் (நாதக) – 1,10,272