ஜி ஸ்கொயர் ரெய்டு- ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
ஜி ஸ்கொயர் ஐடி ரெய்டில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பும், 3.5 கோடி கணக்கு இல்லா ரொக்க பணமும் இதுவரை கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது. இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான என பாஜக குற்றம்சாட்டியது. இதையடுத்து ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஒருவாரமாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ, அவர்கள் கட்டுப்பாட்டிலோ இல்லை என அந்நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், வருமான வரி சோதனையில் ரூ.3.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு நடத்தப்பட்டதும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் ஜி ஸ்கொயர் பாலா நேரில், ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.