Homeசெய்திகள்தமிழ்நாடுவரத்து குறைவால் பூண்டின் விலை கிடுக்கிடுவென உயர்வு!

வரத்து குறைவால் பூண்டின் விலை கிடுக்கிடுவென உயர்வு!

-

 

உச்சத்தைத் தொட்ட பூண்டு விலை!

பூண்டின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரத்து குறைவுக் காரணமாக, கோவையில் ஒரு கிலோ பூண்டு 540 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

‘லவ்வர்’ படம் பார்த்து பாராட்டிய உதயநிதி….. நன்றி தெரிவித்த மணிகண்டன்!

தமிழகத்தில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்டப் பகுதிகளில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோவைக்கு அதிகளவில் பூண்டுகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவைக்கு தினசரி வந்துக் கொண்டிருந்த பூண்டு வரத்துக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சந்தைக்கு தினசரி 100 டன்னுக்கு மேல் இருந்த பூண்டு வரத்து 40 டன்னாக குறைந்துள்ளது.

‘உங்கள் ஆதரவிற்கு நன்றி’…..மனம் நெகிழ்ந்த மறக்குமா நெஞ்சம் படக்குழுவினர்!

இதனால் பூண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் பூண்டு ஒரு கிலோ 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், சில்லறை விற்பனையில் பூண்டு ஒரு கிலோ 540 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ