அமைச்சர் பொன்முடியின் மகனும், தி.மு.க.வைச் சேர்ந்த கள்ளக்குறிச்சித் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கௌதம சிகாமணி, கடந்த 1998- 1999 காலக் கட்டத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்தததாக, அந்நியச் செலாவணி வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த படத்திற்கு தயாராகும் லோகேஷ் கனகராஜ் அண்ட் டீம்……லேட்டஸ்ட் அப்டேட்!
அமைச்சர் பொன்முடியின் மகனான கௌதம சிகாமணி, கள்ளக்குறிச்சித் தொகுதியின் தி.மு.க. எம்.பி.யாக இருக்கிறார். கடந்த 1998- 1999 காலக் கட்டத்தில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பணப்பரிமாற்றம், இந்தோனேசியா மற்றும் அரபு நாடுகளில் பல லட்சம் ரூபாய் முதலீட்டில் பங்குகளை வாங்கிக் குவித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல் நடந்ததாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து, விசாரணை நடத்தினர். மேலும், கடந்த 2008- ஆம் ஆண்டு கௌதம சிகாமணியின் ரூபாய் 8 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் அமலாக்கத்துறையினர் முடக்கினர். இது தொடர்பான வழக்கில் மேலும் சில ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
சூர்யாவின் நடிப்பில் உருவாகும் கங்குவா….. ரசிகர்களுக்காக காத்திருக்கும் செம ட்ரீட்!
இந்த நிலையில், கௌதம சிகாமணியின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.