பொது சிவில் சட்டம் கடும் அச்சுறுத்தலை முன்வைக்கிறது; சமூக கட்டமைப்பிற்கு கட்டமைப்பிற்கு சவால் விடுக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரஜினி, நெல்சன் திலீப் குமார் கூட்டணியின் ஜெயிலர்…… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 13) இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “பொது சிவில் சட்டம் வகுப்புவாத ஒற்றுமையின்மைக்கும், குழப்பத்திற்கும் வழி வகுக்கும். நாட்டின் பன்முகக் கட்டமைப்பின் சாராம்சத்தைக் குறைத்து மதிப்பிட பொது சிவில் சட்டம் வழி வகுக்கும். பொது சிவில் சட்டத்தைத் திணிக்கும் முயற்சி மத விவகாரத்தில் அரசின் அத்துமீறலாக கருதப்படும். தனிமனித சுதந்திரம் மீதான ஆக்கிரமிப்புக்கு கவலைக்குரிய முன்னுதாரணத்தை உருவாக்கி விடும்.
பொது சிவில் சட்டம் பல்வேறு மதங்களுக்கிடையே ஆழமான பிளவுகளையும், சமூக அமைதியின்மையையும் உருவாக்கும். பொது சிவில் சட்டம் கடும் அச்சுறுத்தலை முன் வைக்கிறது; சமூக கட்டமைப்பிற்கு சவால் விடுக்கிறது. முரண், பகைமையை வளர்க்கும் சிவில் சட்டத்தை விட மக்கள் இடையே புரிதல், மரியாதையை மேம்படுத்துவது முக்கியம்.
மோகன்லால் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம்….. சூட்டிங் எப்போது?
பொது சிவில் சட்டம் பன்முகத்தன்மைக் கொண்ட நாட்டின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கு ஊறு விளைவிக்கும். உரிமை, வாய்ப்பில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சூழலை ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும். நமது நாட்டின் பலமான பன்முகத்தன்மையை நாம் நிலை நிறுத்திக் கொண்டாட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.