spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிறப்பு விழா முன்னிட்டு இணைப்பு பாலத்தின் கண்ணாடி அமைக்கும் பணி தீவிரம்

திறப்பு விழா முன்னிட்டு இணைப்பு பாலத்தின் கண்ணாடி அமைக்கும் பணி தீவிரம்

-

- Advertisement -
kadalkanni

திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும், இணைப்பு பாலத்தில் கண்ணாடி அமைக்கும் பணி தீவிரம்.விழாவை முன்னிட்டு இணைப்பு பாலத்தின் கண்ணாடி அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமாரி திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் இணைப்பு பாலத்தின் திறப்பு விழா நடைபெற இரண்டு நாட்களே உள்ள நிலையில் பாலத்தில் கண்ணாடி அமைக்கு பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கன்யாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆம் ஆண்டு தொடக்க விழா வருகின்ற 30,31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் அரசு விழாவாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தின் கண்ணாடி கூண்டு பாலத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். விழாவிற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் இணைப்பு பாலத்தில் கண்ணாடி அமைக்கு பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் – மாணவிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

 

 

MUST READ