Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் GO BACK MODI போஸ்டர்கள்

சென்னையில் GO BACK MODI போஸ்டர்கள்

-

சென்னையில் GO BACK MODI போஸ்டர்கள்

பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை விமர்சித்து சென்னையில் பல்வேறு இடங்களில் GO BACK MODI என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

சென்னையில் GO BACK MODI போஸ்டர்கள்

நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு இன்று வரவுள்ள பிரதமர் மோடியை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை சென்னை முழுவதும் இரவோடு இரவாக #GoBackModi என்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் தமிழர்களை திருடர்கள் போலவும், ஜெகந்நாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டிற்கு சென்று விட்டது என தமிழ்நாட்டையும் தமிழர்களையும் விமர்சித்து பிரதமர் மோடி பேசி இருந்த நிலையில், இன்று மாலை கன்னியாகுமரி வரவுள்ள பிரதமர் மோடியின் வருகையை கண்டிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம், அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம், சென்ட்ரல் ரயில் நிலையம், பசுமைவழிச் சாலை போன்ற முக்கிய இடங்களில் GoBackModi என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

சென்னையில் GO BACK MODI போஸ்டர்கள்

இந்த போஸ்டரில் தமிழ் மக்களை இழிபடுத்தி விட்டு, தமிழ்நாட்டுக்கு வருவதா என்ற தலைப்பில், Hello Netizen, Ready Start 1 2 3 #GoBackModi என்ற வாசகத்தை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்ய இணைய வாசிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய தேர்தல் ஆணையமே தூங்காதே என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹேமந்த் அண்ணாதுரை ஏற்கனவே பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர், ஒன்றிய அமைச்சர்கள் ஆகியோரின் செயல்பாடுகளை கண்டித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

MUST READ