பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக்கவசத்தை அ.தி.மு.க. பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்குமாறு வங்கி நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பசும்போன் முத்துராமலிங்க தேவர் தங்கக்கவசத்தை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி, அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (அக்.10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கட்சி விதிப்படி, அ.தி.மு.க. வங்கிக் கணக்குகளை பொருளாளரே நிர்வகித்து வருகிறார்.
அதன் அடிப்படையில், அ.தி.மு.க. பொதுக்குழுவால் பொருளாளராகத் தேர்வுச் செய்யப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முத்துராமலிங்க தேவர் நினைவிடப் பொறுப்பாளர் இணைந்து வங்கியில் உள்ள தங்கக்கவசத்தை எடுக்க அனுமதி அளித்து, உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
‘இஸ்லாமிய கைதிகள் விடுதலை’- முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் காரசார வாதம்!
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடி உத்தரவைப் பெற்றிருக்கலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.