சுவரில் துளையிட்டு தங்க நகைகள் கொள்ளை
தாம்பரத்தில் உள்ள நகை கடையில் கழிவறை சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அடுத்த கேம்ரோட்டில் பரிஷ் ஜிவல்லரி மற்றும் அடகு கடை உள்ளது. இதன் உரிமையாளர் மனோஜ், நேற்று வழக்கம் போல் கடையை அடைத்து சென்ற நிலையில் பின் பக்கத்தில் உள்ள கழிவறை சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையன் லாக்கர்களை அறுத்தும் உடைத்தும் முயற்சி செய்துள்ளார்.
அதே நேரத்தில் 20 கிலோ வெள்ளிப்பொருட்களை அள்ளி சென்றுள்ளனர். மேலும் தங்க நகைகள் களவு போனது குறித்து லாக்கரை திறக்க முடியவில்லை, திறந்தால் தான் அதில் கொள்ளை போனது தெரிய வரும் என உரிமையாளர் கூறினார்.
சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தடயங்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் சிசிடிவி கேமரா பதிவில் ஒருவன் படம் பதிவாகியுள்ளது.
சேலையூர் உதவி ஆணையாளர் கிரிஸ்டின் ஜெயசீல் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.