தங்கம் விலை – அதிரடி உயர்வு. கிராமுக்கு ரூபாய் 360 உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து நாளுக்கு நாள் உச்சத்தில் ஏறி வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 1 கிராம் ரூபாய் 5,425-க்கு உயர்ந்துள்ள நிலையில் 1 சவரன் ரூபாய் 43,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருக்கும் நிலையில் இன்று 360 ரூபாய் உயர்ந்திருக்கிறது. கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலை 1000 ரூபாய்க்கும் மேலாக உயர்ந்திருக்கும் நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் 43,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று சந்தை மதிப்பில் ஒரு கிராம் தங்கம் 5,425 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த தொடர் ஏற்றத்தால் தங்க பிரியர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.
சென்னையில், தங்கத்தின் விலை உயர்வை தொடர்ந்து சந்தையில் வெள்ளி விலையும் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து சில்லறை வர்த்தகத்தில் 1 கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூபாய் 72.70-க்கு விற்பனையாகிறது.
சந்தையில் நிலவப்படும் இந்த விலை ஏற்றத்தினால் தங்கம் மற்றும் வெள்ளி பிரியர்களின் நிலை மிக பெரிய கேள்விக்குறியில் உள்ளது.