Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதே போல நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.6,630-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.53,040க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சற்று குறைந்த தங்கம் விலை இன்று ஏறியது.

இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,645க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.53,160-க்கு விற்பனையாகிறது.

சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ரூ.95க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.1,200 குறைந்து ரூ.95,000க்கு விற்பனையாகிறது.

சற்று குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? (apcnewstamil.com)

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து தங்கம் வாங்குபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ