சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.51,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.51,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.6,385-க்கு விற்பனையானது. தங்கம் விலை குறைந்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.89-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து, ரூ.6,420-க்கும் ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து, ரூ.51,360-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.91 விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.91,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.