Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

-

சென்னையில் ஆபரன தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவுநாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்திற்கான சுங்கவரி 15 விழுக்காட்டில் இருந்து 6 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

சுங்க வரி குறைந்ததையடுத்து தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2080 குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.52,400 விற்பனையானது. ரூ.260 குறைந்து ரூ.6,550 க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று 480 ரூபாய் சரிவைக் கண்டிருக்கிறது. பட்ஜெட் தாக்கல் எதிரொளியாக தங்கம் விலை 2 வது நாளாக சரிவை கண்டுள்ளது.

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.60 குறைந்து ரூ.6490க்கும், ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.51,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.0.50 குறைந்து ரூ.92 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்னும் வேகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ