அட்சய திருதியை தினமானஇன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் 3-வது முறை உயர்ந்துள்ளது.
இன்று காலை 6 மணிக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், சுமார் 8:30 மணியளவில் மீண்டும் ரூ.360 உயர்ந்து சவரன் ரூ.53,640க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6705க்கு விற்கப்பட்டது.அட்சய திருதியை கொண்டாடப்படும் நிலையில் தங்க நகைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருக்கின்றனர்.காலையில் இரு முறை தலா ரூ.360 என ரூ.720 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.520 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,160-க்கும் ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து ரூ.6,770-க்கும் விற்பனையாகிறது.நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.6615-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.6770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அட்சய திருதியை முன்னிட்டு சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 30 காசுகள் உயர்ந்து 90 ரூபாய்க்கும், ஒரு கிலோ 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகின்றது.
ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்த நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொடும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.