22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,000 குறைந்துள்ளது.
“சென்னையில் 80% இடங்களில் மின்விநியோகம்”- தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பேட்டி!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,000 குறைந்து, ரூபாய் 46,800- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 125 குறைந்து, ரூபாய் 5,850- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 2.10 குறைந்து, ரூபாய் 81.40- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியில் விலை அதிரடியாகக் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நகைகளை வாங்க, தங்க நகைக்கடைகளில் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது.