Homeசெய்திகள்தமிழ்நாடுஇல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி! - குறைந்தது தங்கம் விலை!

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி! – குறைந்தது தங்கம் விலை!

-

- Advertisement -

தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.49,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்து ரூபாய் 50,000- ஐ நெருங்கியது. அதாவது சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 760 உயர்ந்து, ரூபாய் 49,880- க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 95 உயர்ந்து ரூபாய் 6,235- க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 81.50- க்கு விற்பனைனது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலையே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று தங்க நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.49,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50-க்கும், கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ