சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,040-க்கு விற்பனையானது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரனு ரூ.53,160-க்கு விற்பனையானது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு, ரூ.20 குறைந்து ரூ.6,660க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் நிம்மதியடைந்துள்ளனர்.