Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 46 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 352 உயர்ந்து ரூபாய் 46,000 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,080 வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று இதுவரை இல்லாத அளவாக தங்கம் ஒரு சவரனுக்கு ரூபாய் 45,760- க்கு விற்பனையானது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க மைய வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தியதே காரணம் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1 உயர்ந்து, ரூபாய் 82.80- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

MUST READ