Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிரடியாக குறைந்தது தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

-

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து, ஒரு சவரன் 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,712-க்கு விற்பனை செய்யப்ட்டது. இதேபோல் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.5,839-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.76.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ