Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை - இல்லத்தரசிகள் கவலை

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலை

-

தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் விலை சவரனுக்கு 120 உயர்ந்து ஒரு சவரன் 48,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.6,090க்கு விற்பனையானது. மேலும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து  ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து, ரூ. 6,105 க்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 48,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையானது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.49 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

MUST READ