Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக ஊழல் பட்டியல்: சிபிஐ-யிடம் புகார் அளிக்க உள்ளேன் - அண்ணாமலை பேட்டி..

திமுக ஊழல் பட்டியல்: சிபிஐ-யிடம் புகார் அளிக்க உள்ளேன் – அண்ணாமலை பேட்டி..

-

- Advertisement -

திமுக ஊழல் பட்டியலின் அடிப்படையில், டெல்லி சென்று சிபிஐயிடம் புகாரளித்து  வழக்கு பதிவு செய்ய உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வெளியிடப்பட்டுள்ள ஊழல் பட்டியலின் அடிப்படையில் அடுத்த வார இறுதிக்குள் டெல்லி சென்று சிபிஐ வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும், இதை அப்படியே விடப்போவது இல்லை என்றும் கூறினார். உங்கள் மீது திமுகவைச் சார்ந்த உறுப்பினர்கள் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனரே என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், “ஊழல் செய்த பணத்தினை வழக்கறிஞர்களிடம் செலவு செய்ய வேண்டி இருப்பதால் , வழக்கு தொடர்வார்கள். எந்த பகுதியில் வழக்கு பதிவு செய்தாலும், அங்கு நான்கு மணி நேரம் எனக்கு கிடைத்தாலும் என் கட்சியை வளர்ப்பதற்காக பயன்படுத்துவேன்.

திமுக ஊழல் பட்டியல்: சிபிஐ-யிடம் புகார் அளிக்க உள்ளேன் - அண்ணாமலை பேட்டி..

வழக்கு தொடர்ந்தாலும் அதற்கு நான் பயப்பட போவதில்லை. நான் குற்றம் சாட்டிய நிறுவனங்கள் கம்பெனிகள் எதையும் திமுகவைச் சார்ந்த யாரும் என்னுடையது இல்லை என இதுவரையில் மறுப்பு தெரிவிக்கவில்லை. அது அவர்களுடையது இல்லை என்றால் மறுப்பு தெரிவிக்கட்டும். பட்டியல் வெளியிட்டு 24 மணி நேரம் முடிந்த நிலையில் இதுவரையில் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இன்னும் பல ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட தயாராக இருக்கின்றோம் .. ஊழல் செய்த யாரும் தப்பி செல்ல முடியாது. என்னிடம் பூச்சாண்டி வேலை எல்லாம் காட்ட வேண்டாம்.

இதையெல்லாம் ஒன்றும் தெரியாதவர் அரசியலுக்கு வந்தால் அவரிடம் சொல்லலாம்; அவனை மிரட்டியும் உருட்டியும் பார்க்கலாம்; என்னிடம் உங்கள் உருட்டலும் மிரட்டலும் வேலைக்காகாது. ஆர்.எஸ். பாரதி மட்டுமல்ல அவர் தந்தையே வந்தாலும் சந்திக்க தயார். எங்கும் தப்பி எல்லாம் செல்ல முடியாது என்னுடைய போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். நூறு வருடம் வாழப்போவதில்லை; இன்றோ நாளையோ மரணம் நம்மை தழுவுவது உறுதி. அதனால் எந்த அச்சுறுத்தல் வந்தாலும் நான் பயப்பட போவதில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

MUST READ