ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு:
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தொடக்க ,நடுநிலை பள்ளிகள், உயர்நிலை ,மேல்நிலை பள்ளிகள் ,தனியார் பள்ளிகள் ,ஆங்கில இந்தியன் பள்ளிகள் உட்பட சுமார்50 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பணியாற்றும் 2சுமார் லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் சிலரை தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி அவர் பெயரால் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் 396 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.அதில் 386 பள்ளிகள் பணியாற்றும் ஆசிரியர்களும், மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றுவோர்10 பேர் என மொத்தம் 396 பேருக்கு விருதுகள் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான விழா செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடக்கிறது.
பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன், மற்றும் பள்ளி கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகளும் இந்த விழாவில் பங்கேற்க இருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 3முதல் 5 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம் ரொக்கம், பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.