குண்டர் சட்ட நடவடிக்கைகளுக்கு கையெழுத்திடும் அதிகாரத்தை காவல்துறை ஐ.ஜி. (அல்லது) காவல் ஆணையர்களுக்கு வழங்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
“பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 8.1% ஆக அதிகரிக்க வாய்ப்பு”- எஸ்பிஐ தகவல்!
வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் சுரேஷ் குமார், ராமகிருஷ்ணா ஆகியோர் கொண்ட அமர்வு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழழகன் என்பவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துச் செய்து உத்தரவிட்டனர். மேலும், மாவட்டங்களில் குண்டர் சட்ட நடவடிக்கைகளுக்கு கையெழுத்திடும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஏர்பஸ்ஸிடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ நிறுவனம்!
அத்துடன், குண்டர் சட்ட நடவடிக்கைகளுக்கு கையெழுத்திடும் அதிகாரத்தை காவல்துறை ஐ.ஜி. (அல்லது) காவல் ஆணையர்களுக்கு வழங்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழழகன் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துச் செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.