Homeசெய்திகள்தமிழ்நாடுவிராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை – மக்கள் மகிழ்ச்சி

விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை – மக்கள் மகிழ்ச்சி

-

- Advertisement -
kadalkanni

விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை வெளியிட்டதை தொடர்ந்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கொண்டாட்டம் : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை – மக்கள் மகிழ்ச்சிபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி பெரிய நகரமாகும் இங்கு ஐடிசி, எஸ்ஆர்எப், டிவிஎஸ், சன்மார் அலாய்ஸ், ஹரிஹர் அலாய்ஸ், ரானே பவர் ஸ்டியரிங்க், ரானே இஞ்சின் வால்வ்ஸ்,சென்வியான், காற்றாலை உற்பத்தி செய்யும் வின்ட் மில் உள்ளிட்ட கார்பரேட் தொழிற்சாலைகள், மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய தொழிற்சாலைகள் உள்ளது. 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வரும் விராலிமலை எப்போதோ பேரூராட்சி ஆக வேண்டும் ஆனால், கடந்த 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த அதிமுக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால், தொடர்ந்து ஊராட்சியாக பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

85 சதவீதம் மக்கள் தொகை உயர்வு, 104 சதவீதம் கட்டடங்கள் உயர்வு மேலும், தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால் நகர்புற வளர்ச்சி பண்புகளை கருத்தில் கொண்டு பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு முதன்மை செயலாளர் தா. கார்த்திகேயன் ஆணை வெளியிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, விராலிமலை சோதனை சாவடி, கடைவீதி! காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்று திரண்ட திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

MUST READ