திருநின்றவூர் அருகே கொட்டாமேடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை செங்கற்களை சுமக்க வைத்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் உட்பட்ட திருநின்றவூர் கொட்டாமேடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளி நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை அழைத்து கட்டுமான பணிக்கான செங்கற்களை சுமக்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது.மேலும் பள்ளி மாணவர்கள் சீருடை உடன் செங்கற்களை சுமந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த காட்சிகளில் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் பள்ளி வளாகத்தினுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் கற்களை பள்ளி சீருடையில் இருக்கும் மாணவர்கள் தூக்கி செல்வது பதிவாகி உள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கேட்ட போது ஆசிரியர் ஒருவர் செங்கல் கற்கள் பத்திரமாக இருக்கத்தான் எடுத்து வைக்கிறோம் என கூறுகிறார்.மேலும் வீடியோ எடுத்துக்கோ பள்ளி வளாகத்திற்கு வராதே என கூறுவது போன்றும் அப்பொழுதும் மாணவர்களை வேலை வாங்குவதும் அதில் பதிவாகி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை கவனம் செலுத்தி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்.பிக்கள் கூட்டம்! அடங்கும் பாஜக ஆட்டம்! என்.ஆர்.இளங்கோ நேர்காணல்!