Homeசெய்திகள்தமிழ்நாடுமாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

-

- Advertisement -

மசோதாக்கள் மீதான ஒப்புதல் வழங்குவதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேர்மையற்ற செயல்பாட்டுடனும்,  பஞ்சாப் வழக்கில் உச்சநீதிமன்ற வழங்கிய  தீர்ப்பை  மதிக்காமலும் செயல்பட்டுள்ளார் என்ற தீர்ப்பை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு மசோதாக்கள் மீதான ஒப்புதலை நீண்ட காலம் நிறுத்தி வைத்ததன் மூலம், தன்னுடைய பணியை செய்யாமல், சுப்ரா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு அவமரியாதையை தமிழ்நாடு ஆளுநர் ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநரின் செயலால், அரசியல் சாசன பிரிவு 142 இன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி  மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க முடிவு செய்ததாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிடுள்ளனர். ஆளுநர் பதவியை எந்த வகையிலும் நாங்கள் குறித்து மதிப்பிடவில்லை. ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மரபுகளுக்கு உரிய மரியாதையுடன் ஆளுநர் செயல்பட வேண்டும்

சட்டமன்றம் மற்றும்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மூலம் வெளிப்படுத்தப்படும் மக்களின் விருப்பத்தை மதித்து ஆளுநர் என்பவர் செயல்பட வேண்டும். ஆளுநர் ஒரு நண்பராக, ஒரு philosopher ஆக மற்றும் ஒரு  வழிகாட்டியாக தனது பங்கை அரசியல் நலன் கருதாமல், அவர் எடுக்கும் அரசியலமைப்பு உறுதிமொழியின் படி செயல்படுத்த வேண்டும்.

மோதல்கள் எழும் காலத்தில், தன்னுடைய ஞானத்தால் அரசின் செயல்பாட்டை உயர்வூட்டும் வகையில் செயல்பட்டு முன்னோடியாக  இருக்க வேண்டுமே தவிர அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்க கூடாது. ஆளுநரின் அனைத்து செயல்பாடுகளும், தான் வகிக்கும் உயர் அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்தை மனதில் கொண்டு மட்டுமே  செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

ஆளுநர் பதவியேற்பதற்கு முன்பு, அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியை பாதுகாக்கவும், மாநில மக்களின் சேவை மற்றும் நல்வாழ்வுக்காக தனது பணிகளை சிறப்பானதாகுவும் அர்ப்பணிப்புடனும் செய்யவேன் என்றும்  உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்.

எனவே, அவரின் அனைத்து செயல்களும் அவரது சத்தியப் பிரமாணத்திற்கு உண்மையாகவும், அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள கடைமையை நிறைவேற்றுவதும் கட்டாயமாகும். மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராக, மாநில மக்களின் விருப்பத்திற்கும் நலனுக்கும் முன்னுரிமை அளித்து, மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.

ஏனெனில், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஆளுநர் பொறுப்புக்கு உள்ள அதிகாரத்தால், அவரின்  செயல்பாட்டால் மாநில மக்களுக்கு ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டே , ஆளுநர் பொறுப்பேற்கும் போது  செய்யப்படும்  சத்தியப்பிரமாணம் மக்களின் சேவையே முக்கியம் என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஜனநாயக நடைமுறை அடிப்படையில் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மாநில சட்டமன்றத்தில் வெளிப்படையான விருப்பத்திற்கு முரணாக ஆளுநர் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர் எடுத்துக் கொண்ட அரசியல் சாசன பிரமாணத்திற்கு எதிரானதாகும்.

உயர் பதவிகளில்  அரசியலமைப்பு பொறுப்புகளில் இருப்பவர்கள் அரசியலமைப்பின் மதிப்புகளால் வழிநடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கருதுகிறது. அரசியலமைப்பின் மதிப்புகள், இந்திய  மக்களால் மிகவும் போற்றப்படும்  நமது முன்னோர்களின் பல வருட போராட்டம் மற்றும் தியாகத்தால் நமக்கு கிடைத்தவை.

அரசியல் சாசன பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் முடிவுகள் எடுக்கும் பொழுது தற்காலிக அரசியல் பரிசீலனைகளுக்கு அடிபணியக்கூடாது, மாறாக அரசியலமைப்பின்  உணர்வால் மட்டுமே தங்களை வழிநடத்த வேண்டும். 1949 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சபையில் அண்ணல் அம்பேத்கருடைய  இறுதிப்பேச்சை மேற்கோள் காட்டி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

However good a Constitution may be, it is sure to turn out bad because those who are called to work it, happen to be a bad lot. However bad a Constitution may be, it may turn out to be good if those who are called to work it, happen to be a good lot” We would also like to refer to a snippet of history from the days of infancy of the Constitution and the Indian Republic, which has been narrated in the “Eminent Parliamentarians Monograph Series on Dr. Rajendra Prasad” published by the Lok Sabha Secretariat in 1990 (pp. 102).

In the matter concerning the constitutional role of the President in legislative processes, an issue arose during the deliberations on the Hindu Code Bill, wherein the first President of India, Dr. Rajendra Prasad, expressed reservations and sought to assert his independent authority to withhold assent to the legislation. A reference was made to the first Attorney General for India, M.C. Setalvad, who clarified that the role of the President under the Indian Constitution was analogous to that of the British monarch and he was expected to serve as a constitutional figurehead. The Attorney General opined that the President does not possess the authority to act contrary to the advice of the Council of Ministers. The opinion of the Attorney General was, with respect and magnanimity, accepted by the President and thus the ensuing controversy between the Prime Minister and the President was laid to rest.

ஆளுநரும் மாநில அரசும் இணைந்து, மக்களின் நலன்களையும் நல்வாழ்வையும் முதன்மையாகக் கொண்டு இணக்கமாகச் செயல்படுவார்கள் என்று  நம்புகிறோம்.  இந்தத் தீர்ப்பின் நகலை ஒவ்வொரு உயர்நீதிமன்றங்களுக்கும், அனைத்து மாநில ஆளுநர்களின் முதன்மைச் செயலாளர்களுக்கும் அனுப்பவும் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்துக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளானர்.

அரசியல் சட்ட வரைமுறைகளை மிஞ்சிய அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை – உறுதி செய்த உசச்நீதிமன்றம்

MUST READ