தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (நவ.18) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, என்.சங்கரய்யா, பங்காரு அடிகளார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது!
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் முன்மொழிந்து பேசினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது, “எனது உடல்நலனை விட மாநில மக்களின் நலனே முக்கியம்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் நடக்கின்றன. மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தலையாய மாநிலம் தமிழ்நாடு. சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கே முன்னோடியாக உள்ளது தமிழகம். திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறோம். இத்தகைய சூழல்களைத் தடுக்கும் வகையில் சில இடையூறுகள் இருக்கின்றன. நிதி நெருக்கடி, மத்திய அரசின் நெருக்கடி இல்லையெனில் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!
அவசரம், அவசியம் கருதி தமிழ்நாட்டின் நலனுக்காக சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. மசோதாக்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசிடம் ஆளுநர் விளக்கம் கோரலாம். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் அடிப்படையில் மசோதாக்களைத் திருப்பி அனுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையை, ஜனநாயக அரசை ஆளுநர் அவமதிக்கிறார் என்றே பொருள். ஆளுநரின் செயல் சட்டவிரோதம், ஜனநாயக விரோதம், மக்கள் விரோதம், மனச்சாட்சிக்கு விரோதம். மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய அனைத்து வினாக்களுக்கும் முறையாகப் பதில் அளித்திருக்கிறோம். அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்து வகையிலும் ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுகிறார்” என்று குற்றம் சாட்டினார்.