Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் முடிவெடுக்காத நிலையில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

-

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

ஆளுநர் முடிவெடுக்காத நிலையில், ஐந்து கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!

நன்னடத்தை அடிப்படையில் ஐந்து கைதிகளை முன்கூட்டியே விடுதலைச் செய்வது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று (அக்.06) மாலை மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை முன்கூட்டியே விடுதலைச் செய்யும் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்கவில்லை. ஆளுநர் முடிவெடுக்காததால் ஐந்து கைதிகளுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை.

ஆளுநரிடம் கோப்பு நிலுவையில் உள்ளதால் சிறைவாசிக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது” என்று வாதிட்டார்.

“ரோகிணி தியேட்டர் சேதத்திற்கு போலீசின் தவறே காரணம்”- உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

தமிழக அரசின் வாதத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், ஷாகுல் அமீது, அஸ்லாம், ஜாகீர் உசேன், கமல், விஜயன் ஆகியோருக்கு மூன்று மாத இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்காத நிலையில், உயர்நீதிமன்றம் இத்தகைய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ