Homeசெய்திகள்தமிழ்நாடு"பா.ஜ.க. தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது"- ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!

“பா.ஜ.க. தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது”- ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!

-

 

 

"பா.ஜ.க. தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது"- ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
File Photo

தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதில் அளித்துள்ளார். சுமார் 11 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், “ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு அமைதிப் பூங்காதான். ஆளுநர் பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் செய்கிறார்; சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடும் ஆளுநர், திராவிடத்துக்கு தவறான பொருள் சொல்கிறார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை!

திருக்குறளைத் திரிக்கிறார்; சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைக்கிறார். ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை; பா.ஜ.க. தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது. கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர்; ராஜ்பவனில் உட்கார்ந்து அரசியல் செய்கிறார். அரசு எழுதித் தந்ததை ஆளுநர் படிக்க வேண்டும் என்பதே விதி; அதுதான் நடைமுறை. அரசு எடுத்த நடவடிக்கை எல்லாம் மறைத்து விட்டு ஒரு எதிரிக்கட்சி அரசியல் தலைவரைப் போல் பேசுகிறார்.

ஆளுநரின் ஒப்புதலுக்காக 17 மசோதாக்கள் உள்ள நிலையில் மசோதாக்கள் நிலுவையில் இல்லை என பொய் தகவலைக் கூறுகிறார். தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் காரணமாக உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை 26% உயர்ந்துள்ளது. ஆளுநர் உரைகள் மாநிலத்தின் அமைதியைச் சீர்குலைப்பதாக அமைந்துள்ளன என்பதே உண்மை.

‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் இந்தியா’- காரணம் என்ன தெரியுமா?

கோவை மாவட்டம், உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். கனியாமூர் பள்ளி மாணவி தற்கொலையைத் தொடர்ந்து நடந்த வன்முறையை துப்பாக்கிச்சூடு இல்லாமல் காவல்துறை சில மணி நேரத்தில் கட்டுப்படுத்தியது. ஆளுநரின் செயல்கள் மாநிலத்தின் நிர்வாகத்தை இயன்றவரை முடக்கி வைக்கும் முயற்சி தானே. ஆளுநர் மாளிகை நிதி தொடர்பாக நிதியமைச்சர் எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை”. இவ்வாறு அமைச்சரின் பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ