விளக்கம் கேட்டு 10- க்கும் மேற்பட்ட மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10- க்கும் மேற்பட்ட மசோதாக்களை விளக்கம் கேட்டு, தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
உலகக்கோப்பைப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த முகமது ஷமி!
இதையடுத்து, மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பும் வகையில், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் ஆளுநர் தொடர்பான வழக்கில், மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருப்பது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.